Home முக்கிய செய்திகள் வரலாறு காணாத மாபெரும் மக்கள் போராட்டம் – முற்றாக முடங்கும் வடமாகாணம்!

வரலாறு காணாத மாபெரும் மக்கள் போராட்டம் – முற்றாக முடங்கும் வடமாகாணம்!

115
0

வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நாளை திங்­கட்­கி­ழமை முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளதால் வடக்கு முற்­றாக முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில், நடைபெறவுள்ள இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக மக்­கள் முன்­னணி, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம், வடமாகாண ஆசிரியர் சங்கம், யாழ் வர்த்தகர் சங்கம், கிளிநொச்சி வர்த்தகர் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­க­ளது முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யுள்­ளன.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளுள் ஒன்­றா­கவே வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ர­மும் காணப்­ப­டு­கின்­றது. உள்­ளக விசா­ர­ணைப் பொறி­மு­றை­யை­யும் உள்­ளக கலப்பு விசா­ர­ணைப் பொறி­மு­றை­யை­யும் எம்­மால் ஏற்­றுக் கொள்ள முடி­யாத நிலை­யில் தொடர்ந்­தும் ஜெனிவா மனித உரி­மை­கள் சபை­யால் மேற்­படி நட­வ­டிக்­கை­க­ளுக்கு கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­வ­தை­யும் எம்­மால் ஏற்­றுக் கொள்­ள ­மு­டி­யா­துள்­ளது.

பொறுப்­புக்­கூ­றும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க
இலங்கை அரசு தொடர்ந்­தும் தவ­று­வ­த­னால் அந்­தக் குற்­றங்­கள் தொடர்­பில்
பன்­னாட்டு நீதி­மன்ற விசா­ர­ணைப் பொறி­மு­றை­யின் கீழ் அதனை நிறை­வேற்ற
வேண்­டிய அவ­சி­யம் எழு­வதை ஐ.நா. மனித உரி­மை­கள் சபை கவ­னத்­தில் கொள்ள
வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகளுக்கான நியா­ய­மான தீர்வை பன்­னாட்டு விசா­ர­ணைப் பொறி­முறை ஒன்­றி­னூ­டா­கவே சாத்­தி­ய­மாக்க முடி­யும். ஐ.நா. பாது­காப்­புச் சபை ஊடாக இலங்கை விவ­கா­ரம் கையா­ளப்­பட வேண்­டும் என வலியுறுத்தியே இவ் மாபெரும் மக்கள் போராட்டம் நாளை கொளீ நொச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.