Home உலக செய்திகள் இராஜதந்திர தண்டனை விலக்கு செல்லுபடியாகாது – வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு

இராஜதந்திர தண்டனை விலக்கு செல்லுபடியாகாது – வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு

113
0

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர தண்டனை விலக்கு செல்லுபடியாகாது என பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர தண்டனை விலக்கு இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை அறிவித்துள்ளது.

இது குறித்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட் குறிப்பிடுகையில்…

லண்டனில் போராட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது, இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.