Home தாயக செய்திகள் மதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்!

மதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்!

115
0

சிவராத்திரியை முன்னிட்டு இந்துக்களால் புதிப்பித்த (ஏற்கனவே இருந்த) வளைவை உடைத்த கிறிஸ்தவர்களின் செயலை அராஜக செயலின் எதிரொலியாக சர்வமத பேரவையில் இருந்து இந்து குருமார் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்களே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலயம் செல்லும் வழியில் இருந்த பழைய வளைவை புதுப்பித்துக்கொண்டிருந்த இந்துக்களை அப்பகுதியில் கூடிய கிறிஸ்த்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவர்கள் அமைத்துக்கொண்டிருந்த வளைவையும் நேற்றைய தினம் (3/3/19) உடைத்து முற்றாக சேதப்படுத்திய அநாகரீக மற்றும் மதவெறி செயலை கண்டித்தே இந்து குருமார் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மன்னார் இந்து குருமார் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

‘மன்னார் திருக்கேதீச்சர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு மாற்று மத மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது.

எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையிலிருந்து செயற்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்து குருமார் பேரவையில் உள்ள இந்து குருமார்கள் வெளியேறிக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.