Home தாயக செய்திகள் கிளிநொச்சியில் – காப்புறுதி நிறுவன முகாமையாளர் வெட்டிக் கொலை!

கிளிநொச்சியில் – காப்புறுதி நிறுவன முகாமையாளர் வெட்டிக் கொலை!

134
0

கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றில் முகாமையாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் கிளிநொச்சி – உதயநகர் கிழக்குப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்தவர் எனவும், ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.