Home உலக செய்திகள் ஜெனீவா – ஐ.நா முன்றலில் நீதி வேண்டி அணிதிரண்ட ஈழத் தமிழர்கள்!

ஜெனீவா – ஐ.நா முன்றலில் நீதி வேண்டி அணிதிரண்ட ஈழத் தமிழர்கள்!

148
0

போர்க்குற்றத்திற்கு நிலையான நீதி வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நேற்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்டது.

ஜெனீவா ரயில் நிலையத்தில் இருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையகம் மூன்றல் வரை இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினை, மீள்குடியேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் தமிழ் அமைப்புக்கள் ஊடாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இப் போராட்டத்தின் இறுதியில் வழங்கப்பட்டது.