Home செய்திகள் 60 நாட்களில் 67 பேரை பலிகொண்ட இலங்கையின் புகையிரத சேவை!

60 நாட்களில் 67 பேரை பலிகொண்ட இலங்கையின் புகையிரத சேவை!

129
0

இலங்கையில் கடந்த இரு மாதங்களில் மட்டும் தொடரூந்து மோதி 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடத்தில் ரயிலில் மோதி 570 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில் பாதையில் நடந்து செல்வது, ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தின்படி, தண்டனைக்குரிய குற்றம்
இதனால் ரயில் பாதையில், நடப்பதை தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான கட்டடங்கள், தனியார் வகுப்புகள் ரயில் பாதையை அண்மித்து
காணப்படுவதும், ரயில் விபத்துக்களுக்கான காரணம் என ரயில் பாதுகாப்பு
அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் பாதையில் சென்ற இருவர் நேற்றைய தினம் ரயிலில் மோதி உயிரிழந்துள்ள நிலையில்,
பாடசாலை மாணவர் ஒருவரும் பாடசாலை மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு – கோட்டையில் இருந்து எல்ல நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர்கள் மோதுண்டு உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.