Home தாயக செய்திகள் மனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்!

மனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்!

121
0

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையானது சட்ட பூர்வமாக இன்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சட்டவைத்திய அதிகாரி தலைமையில் அமேரிக்காவின் புளோரிடவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சில மனித எச்சங்களிற்கான அறிக்கையே கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் தாமதமாகி இன்று சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு கிடக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.