Home உலக செய்திகள் லண்டன் ஹீத்றோ விமான நிலையத்தில் தமிழர் கைது!

லண்டன் ஹீத்றோ விமான நிலையத்தில் தமிழர் கைது!

139
0

லண்டன் – ஹீத்றோ விமான நிலையத்தில் தமிழர் ஒருவரை பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெனீவா – ஐ.நா முன்றலில் நடைபெறும் போராட்டத்தில் பங்குகொள்ள சென்ற போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 36 வயதான வாகீசன் தங்கவேல் என்பவரிடம் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வாகீசனை பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின் இரவு 11:00 மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இருப்பினும் பிணையில் விடுவிப்பதற்கு முன்னதாக வாகீசன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டதோடு, அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.